Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Sunday, August 30, 2020

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள்

 


காற்றே வா

                                                              - பாரதியார்

 1.         ‘காற்றே, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்  கொண்டிரு' கோடிட்ட சொல்லின் பொருள்.

            அ) இனிமையாக

            ஆ) சீராக

            இ) செம்மையாக

            விடை: ஆ) சீராக

 2.         கீழ்கண்ட பாரதியார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

            அ) சிறுகதை ஆசிரியர், இதழாளர், கட்டுரையாளர்

            ஆ) கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

            இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

            விடை: இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

 3.         உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

            அ) வசன கவிதை

            ஆ) புதுக்கவிதை

            இ) மரபுக்கவிதை

            விடை: அ) வசன கவிதை

 4.         சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்

            அ) பாரதிதாசன்

            ஆ) பாரதியார்

            இ) கண்ணதாசன்

            விடை: ஆ) பாரதியார்

 

5.         புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிருந்தது

            அ) உணர்ச்சி கவிதை

            ஆ) மரபுக் கவிதை

            இ) வசன கவிதை

            விடை: இ) வசன கவிதை

 6.         பொருத்துக.

            அ) மயலுறுத்து               - 1. சீராக

            ஆ) ப்ராண- ரஸம் - 2. அழிந்து

            இ) லயத்துடன்               - 3. மயங்கசெய்து

            ஈ) மடிந்து                        - 4. உயிர்வளி

            அ) 2, 3, 4, 1

            ஆ) 1, 3, 4, 2

            இ) 3, 4, 1, 2

            ஈ) 3, 2, 1, 4

            விடை: இ) 3, 4, 1, 2

முல்லைப்பாட்டு

                                                              - நப்பூதனார்

 1.         ‘நனந்தலை உலகம் வளைஇ' இதில் 'நனந்தலை' என்பது

            அ) பெரிய

            ஆ) அகன்ற

            இ) நிலையற்ற

            விடை: ஆ) அகன்ற

 

2.         வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை' - இத்தொடரில் சுட்டப்பெறும் கடவுள்.

            அ) திருமால்

            ஆ) சிவன்

            இ) விநாயகர்

            விடை: அ) திருமால்

 3.         முல்லை பாட்டு ________ பாவால் இயற்றப்பட்டது.

            அ) வெண்பா

            ஆ) ஆசிரியப்பா

            இ) கலிப்பா

            விடை: ஆ) ஆசிரியப்பா

 4.         முல்லைப்பாட்டில் உள்ள அடிகள்

            அ) 107

            ஆ) 102

            இ) 103

            விடை: இ) 103

 5.         கூற்றுகளை ஆராய்க.

            கூற்று 1: பத்துபாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் முல்லைப்பாட்டு.

            கூற்று 2: முல்லைப்பாட்டை எழுதியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார்.

            அ) கூற்று 1, 2 சரி

            ஆ) கூற்று 1 சரி 2 தவறு

            இ) கூற்று 1 தவறு 2 சரி

            விடை: ஆ) கூற்று 1 சரி 2 தவறு

 6.         முல்லை நிலத்தின் பெரும்பொழுது

            அ) குளிர்

            ஆ) மாலை

            இ) கார்

            விடை: இ) கார்

 7.         முல்லை நிலத்திற்குரிய பூ எது?

            அ) கொன்றை

            ஆ) பிடவம்

            இ) குருத்தம்

            விடை: ஆ) பிடவம்

 8.         ‘கொடுங்க்கோற் கோவலர்' - இத்தொடரில் கோவலர் யாரைக் குறிக்கும்?

            அ) உழவர்

            ஆ) பெண்கள்

            இ) இடையர்

            விடை: இ) இடையர்

 9.         மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக்      காட்டுவது

            அ)முல்லைப்பாட்டு

            ஆ) சங்க இலக்கியம்

            இ) பத்துப்பாட்டு

            விடை: ஆ) சங்க இலக்கியம்

 10.       பொருத்துக.

            அ) கைதொழுது   - 1. பண்புத்தொகை

            ஆ) தடக்கை                    - 2. வினைத்தொகை

            இ) உறுதுயர்                  - 3. மூன்றாம் வேற்றுமைத்தொகை

            ஈ) மூதூர்               - 4. உரிச்சொல்தொடர்

            ஆ) 2, 3, 4, 1

            ஆ) 1, 3, 4, 2

            இ) 3, 4, 2, 1

            ஈ) 3, 2, 1, 4

            விடை: இ) 3, 4, 2, 1     

No comments:

Post a Comment