கேட்கிறதா என் குரல்
1. கருத்து 1: தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் காற்று என அழைக்கப்படுகிறது.
கருத்து 2: மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்குகளைத் தாண்டி வருவதால் வேகம் மிகுந்து மிதமான இயல்பு கொள்கிறேன்.
அ. கருத்து 1 சரி
ஆ. கருத்து 2 சரி
இ.கருத்து 1, 2சரி
ஈ. கருத்து 1, 2 தவறு
விடை: இ. கருத்து 1, 2சரி
2. பொருத்துக.
அ) வளி மிகின் வளி இல்லை - 1. கண்ணதாசன்
ஆ) கடுங்காற்று மணலைக்கொண்டு வந்து சேர்க்கும்- 2. இளங்கோவடிகள்
இ) வண்டோடு புக்க மணவாய்த் தென்றல் - 3. மதுரை இளநாகனார்
ஈ) நதியில் விளையாடி கொடியில் தலை சீவி - 4. ஐயூர் முடவனார்
அ) 2, 3, 4, 1
ஆ) 1, 3, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
விடை: இ) 4, 3, 2, 1
3. பொருத்துக.
அ) கிழக்கு - 1. வாடை
ஆ) மேற்கு - 2. தென்றல்
இ) வடக்கு - 3. கோடை
ஈ) தெற்கு - 4. கொண்டல்
அ) 2, 3, 4, 1
ஆ) 1,3, 4, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 2, 1, 4
விடை: இ) 4, 3, 1, 2
4. பொருத்துக.
அ) மழையைத் தருவது, கடல் நீர் மேகமாக சுமந்து வருவது - 1. தென்றல்
ஆ) வலிமையோடு வீசுவது, வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசும் வெப்பக்காற்று - 2. வாடை
இ) பனிப்பகுதியிலிருந்து வீசுவது, ஊதைக்காற்று - 3. கொண்டல்
ஈ) அலை, மலை போன்ற தடைகளை தாண்ட வருதல், இதமான காற்று வீசுதல் -
4. கோடை
அ) 2, 3, 4, 1
ஆ) 1, 3, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
விடை: ஈ) 3, 4, 1, 2
5. கூற்று : குளோரோ புளோரோ கார்பன் எனும் நச்சுக்காற்றை
வெளியிடும் குளிர் சாதனப்பெட்டியைப் பயன்படுத்துகிறோம்.
கூற்று : அந்த நச்சு, ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது. இதனால் புறஊதாக் கதிர்கள் நேரடியாகப் பூமியைத் தாக்குகின்றன.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை: இ) கூற்று காரணம் இரண்டும் சரி
6. கூற்று : கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும்போது நீரில் கரைந்துவிடுவதால் அமிலமழை பெய்கிறது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று சரி, காரணம் தவறு
7. கருத்து 1: ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியினால் நடுகடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு வரும் வழியைக் கண்டுப்பிடித்தார்.
கருத்து 2: அந்த பருவக் காற்றுக்கு யவனர் வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமியை ஹப்பாலஸ் என்றே பெயரிட்டு அழைத்தனர்.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1, 2 சரி
ஈ) கருத்து 1, 2 தவறு
விடை: இ) கருத்து 1, 2 சரி
8. கருத்து 1: ஜுன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று தென்மேற்குப் பருவக்
காற்றாகும். 70 விழுக்காடு மழைப்பொழியக் காரணமாக உள்ளது.
கருத்து 2: அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று வடக்கிழக்கு பருவக்
காற்றாகும். இது மழையாகப் புயலாகப் தடம் பதிக்கும்.
அ) கருத்து 1சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1, 2 சரி
ஈ) கருத்து 1, 2 தவறு
விடை: இ) கருத்து 1, 2 சரி
9. உலகக் காற்று நாள் _____
அ) ஜூன் - 15
ஆ) ஜூலை - 15
இ) ஆகஸ்ட் - 15
ஈ) ஜனவரி - 15
விடை: ஜூன் - 1
10. உலகக்காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
5 – ஆம் இடம்