Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Monday, August 31, 2020

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -1

விருந்து போற்றுதும்

 1. ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்' - இத்தொடர் இடம் பெற்ற நூல்

          அ) நற்றிணை

          ஆ) புறநானூறு

          இ) கம்பராமாயணம்

          விடை: அ) நற்றிணை

 

2. இளையான்குடி மாறன் விருந்து படைத்த திறம் கூறும் நூல்

          அ) கம்பராமாயணம்

          ஆ) பெரியபுராணம்

          இ) சிலப்பதிகாரம்                                                                                               

         விடை: ஆ) பெரியபுராணம்

 

3.  கல்வியும்  செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) தொல்காப்பியர்

          விடை: அ) கம்பர்

 

4.  பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுவது

          அ) கல்வி

          ஆ) பொறை

          இ) விருந்தோம்பல்

          விடை: இ) விருந்தோம்பல்  

 

5.  விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்

          அ) கம்பர்

          ஆ) இளங்கோவடிகள்

          இ) செயங்கொண்டார்

          விடை: ஆ) இளங்கோவடிகள்

 

6.     விருந்தினருக்கு உணவிடுவோரின்  முகமலர்ச்சியை உவமையாக்கிப் பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) கம்பர்

          இ) செயங்கொண்டார்

          விடை: இ) செயங்கொண்டார்

 

7.  தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை

          அ) விருந்தினரைப் போற்றல்

          ஆ) தனித்து உண்ணாமை

          இ) விருந்துப் படைத்தல்

          விடை: ஆ) தனித்து உண்ணாமை

 

8.  நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கரியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது.

          அ) சிறுபாணாற்றுப்படை

          ஆ) பொருநாற்றுப்படை

          இ) பட்டினப்பாலை

          விடை: அ) சிறுபாணாற்றுப்படை

 

9. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று பாடியவர்

          அ) திருவள்ளுவர்

          ஆ) ஔவையார்

          இ) கம்பர்

          விடை: ஆ) ஔவையார்       

 

10. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இத்தொடர் இடம் பெற்றது.

          அ) அகநானூறு

          ஆ) புறநானூறு

          இ) குறுந்தொகை

         விடை: இ) குறுந்தொகை


          தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -2 படிக்க Click here  

No comments:

Post a Comment