Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

Monday, August 31, 2020

விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை பகுதி -2

 


விருந்து போற்றுதும்

 11.     நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் வழிச் செல்வோர்க்காக மிகுதியாக கட்டப்பட்டவை

          அ) உணவகங்கள்

          ஆ) சத்திரங்கள்

          இ) விடுதிகள்

          விடை: ஆ) சத்திரங்கள்

 12.     மின்சோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

          அ) வாழையிலை விருந்து விழா

          ஆ) விருந்தோம்பல் விழா

          இ) தமிழர்  விருந்து விழா

          விடை: அ) வாழையிலை விருந்து விழா

 13.     வாழை இலையின் குறுகலான பகுதி உண்பவரின் எப்பக்கம் வரவேண்டும்?

          அ) வலப்பக்கம்

          ஆ) இடப்பக்கம்

          இ) நடுப்பக்கம்

          விடை: ஆ) இடப்பக்கம்

 14.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) மோப்பக் குழையும் அனிச்சம்               - திருவள்ளுவர்

          ஆ) விருந்தே புதுமை                                   - தொல்காப்பியம்

          இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்   - கம்பர்

          விடை: இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்      - கம்பர்

 15.     விருந்தோம்பல் பற்றிய 17- ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம்

          அ) மதுரை

          ஆ) சிதம்பரம்

          இ) மாமல்லபுரம்

          விடை: ஆ) சிதம்பரம்

 16.     கூற்று 1: தலைவாழை இலையில் உணவளிப்பது நம் மரபாகும்.

          கூற்று 2: தமிழர் பண்பாட்டில் உணவுக்கே தனித்த இடமுண்டு.

          அ) கூற்று 1 சரி 2 தவறு

          ஆ) கூற்று 1தவறு 2 சரி

          இ) கூற்று 1, 2 தவறு

          விடை: அ) கூற்று 1 சரி 2 தவறு

 17.     கருத்து 1: தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.

          கருத்து 2: உறவினர் வேறு, விருந்தினர் வேறு, முன்பின் அறியாமல் வரும் புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 18.     கருத்து 1: விதைக்காக வைத்திருந்த நெல்லை உரலில் இடித்து உணவு சமைத்த நிகழ்வைக் குறிப்பிடும் இலக்கியம் புறநானூறு.

          கருத்து 2: நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடுவது

          நல்லியல்பு எனக்குறிப்பிடும் இலக்கியம் நற்றிணை.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2தவறு

          விடை: இ) கருத்து 1, 2 சரி

 19.     கருத்து 1: வாழை இலையின் வலது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான சிறிய

          உணவு வகைகளை வைப்பர்.

          கருத்து 2: வாழை இலையின் இடது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான பெரிய அளவு உணவினை வைத்துப் பரிமாறுவார்கள்.

          அ) கருத்து 1 சரி

          ஆ) கருத்து 2 தவறு

          இ) கருத்து 1, 2 சரி

          ஈ) கருத்து 1, 2 தவறு

          விடை: ஈ) கருத்து 1, 2 தவறு

 20.     பொருத்துக.

          அ) உண்டாலம்ம இவ்வுலகம்                               - 1. பொருநராற்றுப்படை

          ஆ) ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்  - 2. குறுந்தொகை

          இ) காலின் ஏழடிப் பின் சென்று                                      - 3. புறநானூறு

          ஈ) பலர்புகு வாயில் அடைப்ப                               - 4. நற்றிணை

          அ) 1, 3, 4, 2

          ஆ) 4, 3, 2, 1

          இ) 2, 4, 1, 3

          ஈ) 3, 4, 1, 2

          விடை: ஈ) 3, 4, 1, 2


விருந்து போற்றுதும் இயல் - 3 உரைநடை 

பகுதி -1 படிக்க Click here  

         தொகை நிலைத்தொடர்கள் - பத்தாம் வகுப்பு இலக்கணம் 

ஒரு மதிப்பெண்கள் படிக்க Click here