Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331

Friday, August 28, 2020

பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

 

             

       கேட்கிறதா  என்  குரல்

 1.         மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

            அ) ஒளவையார்

            ஆ) திருமூலர்

            இ) தொல்காப்பியர்

            விடை: ஆ) திருமூலர்  

 

2.         கூற்று 1: கிழக்கிலிருந்து வீசுவதால் கொண்டல் எனப்படுகிறது.

            கூற்று 2: மேற்கிலிருந்து வீசுவதால்  தென்றல்  எனப்படுகிறது.

            அ.கூற்று 1தவறு 2 சரி            

            ஆ. கூற்று 1, 2 சரி          

            இ. கூற்று 1 சரி 2 தவறு

            விடை:  இ. கூற்று 1 சரி 2 தவறு

 

3.         பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது எனும் நூலின் ஆசிரியர்

            அ) சொக்கநாதப் புலவர்

            ஆ) குமரகுருபரர்

            இ) காளமேகப்புலவர்

            விடை: அ) சொக்கநாதப் புலவர்

 

4.         பருவகாற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

            அ) ஹூப்ரு

            ஆ) ஹிப்பாலஸ்

            இ) ஹிப்ரோவர்

            விடை: ஆ) ஹிப்பாலஸ்

 

5.         சங்கபுலவர் வெண்ணிக்குயத்தியார் காற்றை இவ்வாறு அழைக்கிறார்.

            அ) களி

            ஆ) வலி

            இ) வளி

            விடை: இ) வளி

 

6.         இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை ______ தருகிறது.

            அ) வடகிழக்குப் பருவக்காற்று

            ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

            இ) தெங்கிழக்குப் பருவக்காற்று

            விடை: ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

 

7.         வளி மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்துப் பாடியவர்

            அ) ஐயூர் முடவனார்

            ஆ) இளநாகனார்

            இ) மாங்குடி மருதனார்

              விடை: அ) ஐயூர் முடவனார்

 

8.         வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்

            அ) ஜூன் முதல் செப்டம்பர் வரை

            ஆ) ஜூலை முதல் அக்டோபர் வரை

            இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

விடை: இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

 

9.         உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.

            அ) முதலிடம்

            ஆ) இரண்டாம்

            இ) ஐந்தாம்

            விடை: இ) ஐந்தாம்

 

10.       இந்தியாவில் மிகுந்த உயிரிப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது.

            அ) நீர் மாசு

            ஆ) காற்று மாசு

            இ) நிலமாசு

            விடை: ஆ) காற்று மாசு

 

11.       உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா பெறுவது

            அ) மூன்றாமிடம்

              ஆ) இரண்டாமிடம்

            இ) முதலிடம்

            விடை: ஆ) இரண்டாமிடம்

 

12.       கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடிய புலவர்

            அ) மதுரை இளநாகனார்

            ஆ) வெண்ணிக் குயத்தியார்

            இ) ஐயூர் முடவனார்

            விடை: அ) மதுரை இளநாகனார்

 

13.       கருத்து 1: வடக்கிலிருந்து வீசுவதால் வாடைக்காற்று எனப்படுகிறது.

            கருத்து 2: இவ்வாடைக்காற்று பனிபகுதியிலிருந்து வீசுவதால் , குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிடறது.

அ) கருத்து 1 சரி   

ஆ) கருத்து 2 சரி  

இ) கருத்து 1, 2 சரி            

ஈ) கருத்து 1, 2 தவறு

விடை: இ) கருத்து 1, 2 சரி

 

   14.   மொழியின் சிறப்பை அறிய துணை செய்வது

            அ) எழுத்து

            ஆ) இலக்கணம்

            இ) சொல்

            விடை: ஆ) இலக்கணம்


 பத்தாம் வகுப்பு - இணையவழி  தேர்வு மூன்றாம் பகுதிக்கு 
Click here

 

 

 

 

 

                               

Wednesday, August 26, 2020

பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் ஒரு மதிப்பெண்கள்

 


                    உரைநடையின்  அணிநலன்கள்

                                                                  - எழில்முதல்வன்

 

1.    எடுத்துக்காட்டு உவமை அணி உரைநடையில்                                  இடம்பெறும்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கணை

          இ) இணை எதுகை

           விடை: அ) இணை ஒப்பு

 

2.       இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல                             இருபுறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்' இவ்வுமை இடம்                  பெற்ற நூல்

          அ) மழையும் புயலும்

          ஆ) குறிஞ்சி மலர்

          இ) தமிழ்த்தென்றல்

          விடை: ஆ) குறிஞ்சி மலர்    

 

3.    உரைநடையின் அணிநலன்கள் எனும் கட்டுரை                                 இடம்பெற்றுள்ள நூல்

          அ) இனிக்கும் நினைவுகள்

          ஆ) தமிழ் உரைநடை

          இ) புதிய உரைநடை

          விடை: இ) புதிய உரைநடை

 

4.    'இந்தியா தான் என்னுடைய மோட்சம்; என் இளமையின் மெத்தை; என் கிழக்காலத்தின் காசி' என்று கூறியவர்

          அ) அறிஞர் அண்ணா

           ஆ) பாரதி

          இ) மு. வரதராசனார்

          விடை: ஆ) பாரதி

 

5.    சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும்             புதிருமனா முரண்படும் கருத்துகளை அமைத்து எழுவது

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கண

          இ) எதிரிணை இசைவு

          விடை: இ) எதிரிணை இசைவு

 

6.    கூற்று 1: திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி 1982         ஆம் ஆண்டு வெளிவந்தது.

         கூற்று 2: இந்தக்  கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு             மொழிகள் இருந்தன.

           அ) கூற்று 1 தவறு 2 சரி          

          ஆ) கூற்று 1 சரி 2 தவறு         

          இ) கூற்று 1, 2 சரி

          விடை: அ) கூற்று 1 தவறு 2 சரி

 

7.       உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்த ஒன்றென             மாட்டின் அஃது

          அ) உவமை

          ஆ) உருவகம்

          இ) எடுத்துகாட்டு உவமை

           விடை: ஆ) உருவகம்

 

8.       மழையும் புயலும்' என்னும் நூலின் ஆசிரியர்

          அ) எழில்முதல்வன்

          ஆ) வ. ராமசாமி

          இ) மு. வரதராஜன்

          விடை: ஆ) வ. ராமசாமி

 

9.       குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த                 வயிறுகள் ஒரு பக்கம் புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்'                 இது யாருடைய உரைநடை?

          அ) அறிஞர் அண்ணா

          ஆ) பெரியார்

           இ) ப. ஜீவானந்தம்

          விடை: இ) ப. ஜீவானந்தம்

 

10.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) தமிழின்பம்               - நூலாசிரியர் இரா. பி. சே.

           ஆ) நாட்டுப்பற்று        - கட்டுரையாசிரியர் அண்ணா

          இ) குறிஞ்சிமலர்            - நூலாசிரியர் பார்த்தசாரதி

          விடை: ஆ) நாட்டுப்பற்று   - கட்டுரையாசிரியர் அண்ணா

 

11.     அக இலக்கியத்தில் காணப்படும் குறீயிடு யாது?

          விடை: இறைச்சி, உள்ளுரை

 

12.     Data- எனும் சொல்லின் பொருள் ________

           விடை: உள்ளீடு

 

13.     சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய இலக்கியம் _________

          விடை: அற இலக்கியம்

 

14.     குறிஞ்சி மலர் எனும் நூலை இயற்றியவர்

          விடை: நா. பார்த்தசாரதி

 

15.     உமயையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென                     மாட்டின் அஃது _______

          விடை: உருவகம்

 

16.     முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன'- இவ்வரியில்                 இடம்பெற்ற உருவகம் எது?

          விடை: முகநிலவில்

 

17.     வ. ராமசாமி இயற்றிய நூல் ________

          விடை: ‘மழையும் புயலும்'

 

18.     புதிய உரைநடை' என்னும் நூலை எழுதியவர் யார்?

           விடை: எழில் முதல்வன்


பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண் பயில இங்கே அழுத்தவும்