Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science subject Study Materials - Gowthamraj. V -B.T. Assistant - Marwar Boys Higher Sec. School - Acharapakkam - 7010900331
Showing posts with label one mark. Show all posts
Showing posts with label one mark. Show all posts

Monday, August 31, 2020

பத்தாம் வகுப்பு புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் துணைப்பாடம்

 

           
     

புயலிலே ஒரு தோணி
                              - ப. சிங்காரம்

1.      வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப்             பெயர் வைக்கும்  நடைமுறை  தொடங்கப்பட்ட ஆண்டு

          அ) 2000

          ஆ) 2001

          இ) 2004

          விடை: அ) 2000

 2.       கஜா புயலின் பெயரைத் தந்த நாடு

          அ) வங்கதேசம்

          ஆ) இலங்கை

          இ) இந்தியா

          விடை: ஆ) இலங்கை

 3.       ‘கப்பித்தான்' - இச்சொல் எதைக் குறிக்கிறது?

          அ) புயல்

          ஆ கப்பல்

          இ) தலைமை மாலுமி

          விடை: இ) தலைமை மாலுமி

 4.       பெய்ட்டி புயலின் பெயரைத் தந்த நாடு.

          அ) தாய்லாந்து

          ஆ) இந்தியா

          இ) இலங்கை

          விடை:  அ) தாய்லாந்து

 5.       ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய்த் தீவுகளைத்             தாக்கும் புயல்கள்

          அ) இடம்புரிப் புயல்கள்

          ஆ) வலம்புரிப் புயல்கள்

          இ) கொரியா புயல்

          விடை: ஆ) வலம்புரிப் புயல்கள்

 6.       'தொங்கான் தன்வசமின்றித் தடுமாறிச் செல்கிறது' -                     இத்தொடரில் 'தொங்கான்' என்பதன் பொருள்

          அ) கப்பல்

          ஆ) புயல்

          இ) பயணி

          விடை: அ) கப்பல்

 7.       கொரியாலிஸ் விளைவை 1835- இல் கண்டுபிடித்தவர்

          அ)  குருஸ்டாவ்

          ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

          இ) சிங்காரம்

          விடை: ஆ) காஸ்பார்ட் குஸ்டாவ்

 8.       'பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி' - இத்தொடர் இடம்             பெற்ற நூல்

          அ) கலித்தொகை

          ஆ) புறநூனூறு

          இ) அகநானூறு

          விடை: இ) அகநானூறு

9.       'புயலிலே ஒரு தோணி ' எனும் புதினத்தில் நம் பாடப்பகுதி             இடம் பெற்ற அத்தியாயம்

          அ) கலைக்கூத்து

          ஆ) கடற்கூத்து

          இ) இசைக்கூத்து

          விடை: ஆ) கடற்கூத்து

 10.     புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்

          அ) தோணி வருகிறது

          ஆ) புயலிலே ஒரு புதிர்

          இ) புயலிலே ஒரு தோணி

          விடை: இ) புயலிலே ஒரு தோணி 

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழித் தேர்வு - Click here



Sunday, August 30, 2020

பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு இணையவழி தேர்வு

 


பத்தாம் வகுப்பு இயல் - 2 - காற்றே வா & முல்லைப்பாட்டு ஒரு மதிப்பெண் வினாக்கள்

 


காற்றே வா

                                                              - பாரதியார்

 1.         ‘காற்றே, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்  கொண்டிரு' கோடிட்ட சொல்லின் பொருள்.

            அ) இனிமையாக

            ஆ) சீராக

            இ) செம்மையாக

            விடை: ஆ) சீராக

 2.         கீழ்கண்ட பாரதியார் பற்றிய கூற்றுகளுள் தவறானது எது?

            அ) சிறுகதை ஆசிரியர், இதழாளர், கட்டுரையாளர்

            ஆ) கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

            இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

            விடை: இ) சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்

 3.         உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்

            அ) வசன கவிதை

            ஆ) புதுக்கவிதை

            இ) மரபுக்கவிதை

            விடை: அ) வசன கவிதை

 4.         சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்

            அ) பாரதிதாசன்

            ஆ) பாரதியார்

            இ) கண்ணதாசன்

            விடை: ஆ) பாரதியார்

 

5.         புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிருந்தது

            அ) உணர்ச்சி கவிதை

            ஆ) மரபுக் கவிதை

            இ) வசன கவிதை

            விடை: இ) வசன கவிதை

 6.         பொருத்துக.

            அ) மயலுறுத்து               - 1. சீராக

            ஆ) ப்ராண- ரஸம் - 2. அழிந்து

            இ) லயத்துடன்               - 3. மயங்கசெய்து

            ஈ) மடிந்து                        - 4. உயிர்வளி

            அ) 2, 3, 4, 1

            ஆ) 1, 3, 4, 2

            இ) 3, 4, 1, 2

            ஈ) 3, 2, 1, 4

            விடை: இ) 3, 4, 1, 2

Friday, August 28, 2020

பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் இணையவழி தேர்வு

 


பத்தாம் வகுப்பு - கேட்கிறதா என் குரல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

 

             

       கேட்கிறதா  என்  குரல்

 1.         மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

            அ) ஒளவையார்

            ஆ) திருமூலர்

            இ) தொல்காப்பியர்

            விடை: ஆ) திருமூலர்  

 

2.         கூற்று 1: கிழக்கிலிருந்து வீசுவதால் கொண்டல் எனப்படுகிறது.

            கூற்று 2: மேற்கிலிருந்து வீசுவதால்  தென்றல்  எனப்படுகிறது.

            அ.கூற்று 1தவறு 2 சரி            

            ஆ. கூற்று 1, 2 சரி          

            இ. கூற்று 1 சரி 2 தவறு

            விடை:  இ. கூற்று 1 சரி 2 தவறு

 

3.         பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது எனும் நூலின் ஆசிரியர்

            அ) சொக்கநாதப் புலவர்

            ஆ) குமரகுருபரர்

            இ) காளமேகப்புலவர்

            விடை: அ) சொக்கநாதப் புலவர்

 

4.         பருவகாற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

            அ) ஹூப்ரு

            ஆ) ஹிப்பாலஸ்

            இ) ஹிப்ரோவர்

            விடை: ஆ) ஹிப்பாலஸ்

 

5.         சங்கபுலவர் வெண்ணிக்குயத்தியார் காற்றை இவ்வாறு அழைக்கிறார்.

            அ) களி

            ஆ) வலி

            இ) வளி

            விடை: இ) வளி

 

6.         இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை ______ தருகிறது.

            அ) வடகிழக்குப் பருவக்காற்று

            ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

            இ) தெங்கிழக்குப் பருவக்காற்று

            விடை: ஆ) தென்மேற்குப் பருவக்காற்று

 

7.         வளி மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்துப் பாடியவர்

            அ) ஐயூர் முடவனார்

            ஆ) இளநாகனார்

            இ) மாங்குடி மருதனார்

              விடை: அ) ஐயூர் முடவனார்

 

8.         வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்

            அ) ஜூன் முதல் செப்டம்பர் வரை

            ஆ) ஜூலை முதல் அக்டோபர் வரை

            இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

விடை: இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை

 

9.         உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.

            அ) முதலிடம்

            ஆ) இரண்டாம்

            இ) ஐந்தாம்

            விடை: இ) ஐந்தாம்

 

10.       இந்தியாவில் மிகுந்த உயிரிப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது.

            அ) நீர் மாசு

            ஆ) காற்று மாசு

            இ) நிலமாசு

            விடை: ஆ) காற்று மாசு

 

11.       உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா பெறுவது

            அ) மூன்றாமிடம்

              ஆ) இரண்டாமிடம்

            இ) முதலிடம்

            விடை: ஆ) இரண்டாமிடம்

 

12.       கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று பாடிய புலவர்

            அ) மதுரை இளநாகனார்

            ஆ) வெண்ணிக் குயத்தியார்

            இ) ஐயூர் முடவனார்

            விடை: அ) மதுரை இளநாகனார்

 

13.       கருத்து 1: வடக்கிலிருந்து வீசுவதால் வாடைக்காற்று எனப்படுகிறது.

            கருத்து 2: இவ்வாடைக்காற்று பனிபகுதியிலிருந்து வீசுவதால் , குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிடறது.

அ) கருத்து 1 சரி   

ஆ) கருத்து 2 சரி  

இ) கருத்து 1, 2 சரி            

ஈ) கருத்து 1, 2 தவறு

விடை: இ) கருத்து 1, 2 சரி

 

   14.   மொழியின் சிறப்பை அறிய துணை செய்வது

            அ) எழுத்து

            ஆ) இலக்கணம்

            இ) சொல்

            விடை: ஆ) இலக்கணம்


 பத்தாம் வகுப்பு - இணையவழி  தேர்வு மூன்றாம் பகுதிக்கு 
Click here