Greetings

"To succeed in your mission, you must have single-minded devotion to your goal" - Dr. APJ. Abdul Kalam

About Me

A Portal for High School level Science related Study Materials in PDF format, Interactive E Contents, Online Quizzes and TNPSC STUDY MATERIAL updates - Gowthamraj. V -B.T. Assistant - GHS - Kadukalur
Showing posts with label slow learner materials. Show all posts
Showing posts with label slow learner materials. Show all posts

Wednesday, August 26, 2020

பத்தாம் வகுப்பு - உரைநடையின் அணிநலன்கள் ஒரு மதிப்பெண்கள்

 


                    உரைநடையின்  அணிநலன்கள்

                                                                  - எழில்முதல்வன்

 

1.    எடுத்துக்காட்டு உவமை அணி உரைநடையில்                                  இடம்பெறும்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கணை

          இ) இணை எதுகை

           விடை: அ) இணை ஒப்பு

 

2.       இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல                             இருபுறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்' இவ்வுமை இடம்                  பெற்ற நூல்

          அ) மழையும் புயலும்

          ஆ) குறிஞ்சி மலர்

          இ) தமிழ்த்தென்றல்

          விடை: ஆ) குறிஞ்சி மலர்    

 

3.    உரைநடையின் அணிநலன்கள் எனும் கட்டுரை                                 இடம்பெற்றுள்ள நூல்

          அ) இனிக்கும் நினைவுகள்

          ஆ) தமிழ் உரைநடை

          இ) புதிய உரைநடை

          விடை: இ) புதிய உரைநடை

 

4.    'இந்தியா தான் என்னுடைய மோட்சம்; என் இளமையின் மெத்தை; என் கிழக்காலத்தின் காசி' என்று கூறியவர்

          அ) அறிஞர் அண்ணா

           ஆ) பாரதி

          இ) மு. வரதராசனார்

          விடை: ஆ) பாரதி

 

5.    சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும்             புதிருமனா முரண்படும் கருத்துகளை அமைத்து எழுவது

          அ) இணை ஒப்பு

          ஆ) இலக்கண

          இ) எதிரிணை இசைவு

          விடை: இ) எதிரிணை இசைவு

 

6.    கூற்று 1: திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி 1982         ஆம் ஆண்டு வெளிவந்தது.

         கூற்று 2: இந்தக்  கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு             மொழிகள் இருந்தன.

           அ) கூற்று 1 தவறு 2 சரி          

          ஆ) கூற்று 1 சரி 2 தவறு         

          இ) கூற்று 1, 2 சரி

          விடை: அ) கூற்று 1 தவறு 2 சரி

 

7.       உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்த ஒன்றென             மாட்டின் அஃது

          அ) உவமை

          ஆ) உருவகம்

          இ) எடுத்துகாட்டு உவமை

           விடை: ஆ) உருவகம்

 

8.       மழையும் புயலும்' என்னும் நூலின் ஆசிரியர்

          அ) எழில்முதல்வன்

          ஆ) வ. ராமசாமி

          இ) மு. வரதராஜன்

          விடை: ஆ) வ. ராமசாமி

 

9.       குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம், பசித்த                 வயிறுகள் ஒரு பக்கம் புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்'                 இது யாருடைய உரைநடை?

          அ) அறிஞர் அண்ணா

          ஆ) பெரியார்

           இ) ப. ஜீவானந்தம்

          விடை: இ) ப. ஜீவானந்தம்

 

10.     பொருந்தாத இணையைக் கண்டறிக.

          அ) தமிழின்பம்               - நூலாசிரியர் இரா. பி. சே.

           ஆ) நாட்டுப்பற்று        - கட்டுரையாசிரியர் அண்ணா

          இ) குறிஞ்சிமலர்            - நூலாசிரியர் பார்த்தசாரதி

          விடை: ஆ) நாட்டுப்பற்று   - கட்டுரையாசிரியர் அண்ணா

 

11.     அக இலக்கியத்தில் காணப்படும் குறீயிடு யாது?

          விடை: இறைச்சி, உள்ளுரை

 

12.     Data- எனும் சொல்லின் பொருள் ________

           விடை: உள்ளீடு

 

13.     சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய இலக்கியம் _________

          விடை: அற இலக்கியம்

 

14.     குறிஞ்சி மலர் எனும் நூலை இயற்றியவர்

          விடை: நா. பார்த்தசாரதி

 

15.     உமயையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென                     மாட்டின் அஃது _______

          விடை: உருவகம்

 

16.     முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன'- இவ்வரியில்                 இடம்பெற்ற உருவகம் எது?

          விடை: முகநிலவில்

 

17.     வ. ராமசாமி இயற்றிய நூல் ________

          விடை: ‘மழையும் புயலும்'

 

18.     புதிய உரைநடை' என்னும் நூலை எழுதியவர் யார்?

           விடை: எழில் முதல்வன்


பத்தாம் வகுப்பு - இரட்டுற மொழிதல் ஒரு மதிப்பெண் பயில இங்கே அழுத்தவும்

 

Monday, August 24, 2020

பத்தாம் வகுப்பு - தமிழ்ச்சொல் வளம் பகுதி - 2

 


தமிழ்ச்சொல் வளம்

- தேவநேயப் பாவாணர்


1.         உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

           அ) அப்பாதுரையார்

            ஆ) பாவாணர்

            இ) இளங்குமரனார்

            விடை: பாவாணர்


 2.         1554_இல்____ என்னும் நூல் முதன் முதலாகத் தமிழில்

            மொழிபெயர்க்கப்பட்டது.

            ரோமன்

            கேர்டிலா

            கார்டிலா

             விடை: கார்டிலா

 

3.          பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள' என்று கூறியவர்

                இளங்குமரனார்

                பாவாணர்

                கால்டுவெல்

               விடை: கால்டுவெல்

 

4.          காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில்

            நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி

            வடமொழி

             தமிழ்

            தெலுங்கு

             விடை:  தமிழ்

5.          நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர்

            என்றவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            பாரதியார்

            விடை: பாரதியார்

        

6.          திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் 

            "திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை" அமைத்திருப்பவர்

            யார்?

            பாவலலேறு பெருஞ்சித்தனார்

             தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

             பாரதியார்

              விடை:      தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார்

7.          பொருத்துக.

            அ) சுள்ளி           -         1. காய்ந்த தாளும்  தோகையும்

            ஆ) சொண்டு    - 2. பதராய்ப்போன மிளகாய்

            இ) வடலி            - 3. காய்ந்த குச்சு

            ஈ) சண்டு            - 4. பனையின் இளநிலை

             அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 2, 3, 4, 1

            ஈ) 3, 2, 4,1

             விடை: ஈ) 3, 2, 4,1

8.         பொருத்துக.

            அ) பிஞ்சு            - 1. குச்சியின் பிரிவு

            ஆ) சூம்பல்        - 2. வேம்பு, ஆமணக்கு ஆகியவற்றின் வித்து

            இ) முத்து            - 3. இளம் காய்

            ஈ) இணுக்கு       - 4. நுனியில் சுருங்கிய காய்

            அ) 1, 3, 4, 2         

            ஆ) 4, 3, 2, 1                   

            இ) 3, 4, 2, 1        

            ஈ) 3, 2, 4, 1

             விடை:  இ) 3, 4, 2, 1   

9.          பொருந்தாத இணையைக் கண்டறிக:

            அ) பைங்கூழ்   - நெல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

            ஆ) கன்று - மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

            இ) அளியல்       - குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

            ஈ) அழுகல்         - குளுகுளுத்த பழம்

            அ) அ, ஆ                      

            ஆ) இ,                       

            இ) ஆ,              

            ஈ) அ,

            விடை:   ஆ) இ 

10.    பொருந்தா இணையைக் கண்டறிக.

          அ) கொப்பு, சினை, போத்து, கவை - தாவரங்களின் கிளைப் பிரிவு

          ஆ) தாள், தோகை, ஓலை, சண்டு - தாவரங்களின் இலைவகைகளைக் குறிக்கும்

          இ) கொத்து, தாறு, கதிர், குரல் - தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

          ஈ) தொலி, ஓடு, மட்டை, தோடு - பழத்தோலின்  மேல்பகுதியினைக் குறிக்கும்

            விடை:   இ) கொத்துதாறுகதிர்குரல் தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள்

11.       இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            திரு. வி.

            ஔவையார்

            விடை: திருவி.

 

12.       திரு. வி. போலவே இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை உடையவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            ஔவையார்

            இரா. இளங்குமரனார்

            விடை:    இராஇளங்குமரனார்

13.       திராவிடவியல் ஒப்பிலக்கணத்தை எழுதியவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            ஔவையார்

             விடை: கால்டுவெல்

14.       உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக் இருந்தவர் யார்?

            பாவலலேறு  பெருஞ்சித்தனார்

            கால்டுவெல்

            தேவநேயப்பாவாணார்

            விடை:  தேவநேயப்பாவாணார்

 

15.       இரா. இளங்குமரனார் படைத்த நூல்களில் ஒன்று

            ரோமன்

            இலக்கண வரலாறு

            கேர்டிலா

             விடை:      இலக்கண வரலாறு


           இது சார்ந்த இணையவழித் தேர்வை தொடர